SPEED GOVERNOR LATEST NEWS FOR TAMIL NADU

வேக கட்டுப்பாட்டு கருவி இன்று முதல் கட்டாயம்:22 லட்சம் கனரக வாகனங்களுக்கு சிக்கல்
சேலம்:தமிழகத்தில் இயக்கப்படும் கனரக வாகனங்களுக்கு, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயம் என்ற நடைமுறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழக போக்குவரத்து துறை கணக்கின்படி, 2016 மார்ச், 31 வரை, 2.22 கோடி வாகனங்கள் இயக்கத்தில் உள்ளன. இதில், 1.96 கோடி போக்குவரத்து அல்லாத வாகனங்களும், 26 லட்சம் சரக்கு போக்குவரத்து வாகனங்களும் அடக்கம். இவற்றில், லாரிகள் மட்டும், 3.53 லட்சம் உள்ளன.10 மாதங்களுக்குப்பின்விபத்துகளை குறைக்கும் வகையில், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம், 2015 அக்., 1 முதல், கனரக வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என அறிவித்தது. தமிழகத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த, போக்குவரத்து சங்கங்கள் கால அவகாசம் கேட்டு கொண்டதால், 10 மாதங்களுக்கு பின், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதில், 2015 அக்., 1க்கு பின், தயாரிக்கப்பட்ட வாகனங்களில், நிறுவனங்களே, வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தி விட்டன. அதற்கு முந்தைய ஆண்டுகளில் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்ட, 22 லட்சம் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலர் தன்ராஜ் கூறியதாவது: தமிழகத்தில், வாகனங்களுக்குவேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்பதை, லாரி உரிமையாளர்கள் எதிர்க்கவில்லை. ஆனால், எந்தெந்த வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்பதை, மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும் என்று தான் கோரி வந்தோம். எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவகாசம் தேவை:அதே நேரத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் கருவியைத் தான் பொருத்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதும், அதற்காக லஞ்சம் கேட்பதும் தொடர் கதையாக உள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தகுதி சான்றிதழ் (எப்.சி.,), புதுப்பிக்கும் பணிகள் பாதிக்கப்படுவதோடு, தினந்தோறும், 1,000 லாரிகள் தகுதி சான்றிதழ் பெற முடியாமல் நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். எனவே, மத்திய, மாநில அரசுகள், லாரி தொழிலை காக்கும் வகையில், எந்தெந்த வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்பதையும், எந்த நிறுவனத்தின் கருவியை பொருத்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி, கருவிகளை பொருத்த கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில், வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தாத வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, வட்டார போக்குவரத்து துறையினர் எச்சரித்துள்ளனர்.
நாட்டில், நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதை தவிர்க்கும் வகையில், உற்பத்தியின்போதே, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற நடைமுறையை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எட்டு இருக்கைகள் மேல் மற்றும், 3,500 கிலோ உள்ள பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில், அதிக பட்சம் 80 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையிலும், பள்ளி வாகனங்கள், குப்பை லாரிகள், கண்டெய்னர் லாரிகளில் அதிகபட்சம், 60 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடந்த, அக்டோபர், 1ம் தேதி முதல், புதிய வாகனங்களில், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே, தகுதிச் சான்று அளிக்கப்படுகிறது. பழைய வாகனங்களில், நேற்று முன்தினத்துடன் (மார்ச், 31) வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்துக்கு முன் பதிவு செய்யப்பட்ட, 90 சதவீத வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி இல்லை.இதுகுறித்து, நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு)துரைசாமி கூறியதாவது: இது குறித்து, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மேலும், திடீர் சோதனை மேற்கொண்டு, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வேகக்கட்டுப்பாட்டு கருவி பஸ், லாரிகளுக்கு அவசியம்:ஏப்.1க்குள் பொருத்த வேண்டும்

SPEED LIMITER TAMPERING: 2 DRIVERS CAUGHT

     7
Two men, aged 41 and 47, will appear in court today for tampering with the speed limiter of their heavy vehicles.
They were travelling at 75kmh and 73kmh respectively, above the speed limit of 60kmh for both.
The 41-year-old will also be charged with not wearing a seat belt under the Road Traffic (Motor Vehicles, Wearing of Seat Belt) Rules.
Motorists caught driving above the speed limit, driving a vehicle with a tampered speed limiter and/or driving without the use of a seat belt, face a fine of up to $1,000 or a jail term of up to three months, or both, for each offence.
Repeat offenders may be punished with a fine of up to $2,000 or imprisonment of up to six months, or both, for each offence.
The Traffic Police said it will be stepping up enforcement actions to deter and detect motorists who tamper with speed limiters, The Straits Times reported.
TAGS: 
- See more at: http://www.tnp.sg/news/singapore-news/speed-limiter-tampering-2-drivers-caught#sthash.dIKWAcTA.dpuf

2 heavy vehicle drivers arrested for tampering with speed limiters

The duo - aged 41 and 47 - were found to be cruising at 75 km/h and 73 km/h, respectively, which exceeded the vehicular speed limit of 60 km/h for both, police say.

    •  
    •  
    SINGAPORE: Two heavy vehicle drivers will be charged in court on Wednesday (Sep 29) for tampering with the speed limiters in their vehicles, said the police in a news release.
    According to the police, the duo - aged 41 and 47 - were found to have their speed limiters tampered with when they were caught for driving at high speed exceeding the allowed vehicular speed limit.
    “The speed of the heavy vehicles were detected to be at 75 km/h and 73 km/h, respectively, which exceeded the vehicular speed limit of 60 km/h for both,” they said.
    The 41-year-old driver will also be charged for failing to wear a seat belt, the police said.
    Motorists caught driving above the allowed speed limits, driving a vehicle with a tampered speed limiter, and/or driving without the use of a seat belt, face a fine of up to S$1,000 or up to three months' jail, or both, for each offence.
    “The Traffic Police takes a stern view on the tampering of speed limiters for the purpose of speeding as it puts the lives of the drivers and other road users at risk," the police said, adding that they will step up enforcement actions to deter and detect these motorists.

    (ப

வேகக் கட்டுப்பாட்டு கருவி திருத்தம்: வாகனமோட்டிகள் மீது குற்றச்சாட்டு

29/09/2015

We are the Supplier of Premium Quality Speed Governor / Vehicle Speed Limiter in Tamil Nadu, India. We manufacture Government (ARAI) Approved Electronic Speed Governor suitable of all types of Commercial Vehicles. Our Speed Limiter is durable and tested for quality and performances. We follow latest manufacturing techniques for the production of our Mercyda Brand Speed Governor.

வாகனமோட்டிகள் இருவர், வேகக் கட்டுப்பாட்டு கருவியை வேண்டுமென்றே திருத்தியமைத்ததற்காகக்  குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு வயது 41, மற்றொருவருக்கு 47.
கனரக வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டியதற்காக இருவரும் பிடிபட்டனர்.
மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் கனரக வாகனங்களின் வேக வரம்பு இருக்கும் நிலையில், இருவரும் மணிக்குச் சுமார் 75 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்களைச் செலுத்தியதாக போலீஸ் தெரிவித்தது.
இருக்கைவாரைப் பயன்படுத்தத் தவறியதற்காகவும் 41 வயது வாகனமோட்டி மீது குற்றஞ்சாட்டப்படும்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சம் ஓராயிரம் வெள்ளி அபராதம் அல்லது மூன்று மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.  

வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி: சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Updated on July 09, 2015

வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி: சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத வாகனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விபத்து இழப்பீடு கோரிய வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கின்றனரா என கேள்வி எழுப்பினார்.

கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பிறகு எத்தனை விபத்துக்கள் நேரிட்டுள்ளன என்றும் வினவிய நீதிபதி, வேக கட்டுப்பாட்டு கருவி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 15ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.


வாகனங்களில் ”ஸ்பீட் கன்ட்ரோல் டிவைஸ்” - மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் 
சென்னை: வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத வாகனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விபத்து இழப்பீடு கோரிய வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கின்றனரா என கேள்வி எழுப்பினார்.


மேலும், கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பிறகு எத்தனை விபத்துக்கள் நேரிட்டுள்ளன. வேக கட்டுப்பாட்டு கருவி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.